இராஜபாளையத்தில் கரடி ஒன்று நீண்ட நேரம் சுற்றித்திரிந்த காட்சிகள் அங்குள்ள சிடிடிவியில் பதிவாகியுள்ளன.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பேருந்து நிலையம் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரடி ஒன்று சுற்று திரிந்துள்ளது.
இது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. பொது மக்கள் அளித்த தகவலின் பேரில், கரடியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.