திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் வழிபாடு செய்தனர்.
திண்டுக்கல் மாநகரில், ஸ்ரீசக்தி காளியம்மன், ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீவீரசக்தி காளியம்மன் என பழமையான கோயில்கள் அமைந்துள்ளன.
வெவ்வேறு இடங்களில் கோயில்கள் அமைந்திருந்தாலும் ஒரே நாளில் திருவிழா கொண்டாடப்பட்டது.
மலைக்கோட்டை குளத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று தெய்வங்களும் நகரில் முக்கிய வீதி வழியாக வலம் வந்தன. இதனைதொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.