கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப் பேரவை அருகே மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்வி உதவித் தொகை வழங்குவதில் தாமதம், பல்கலைக்கழக கட்டணம் உயர்வு, அரசுக் கல்லூரிகளில் நிரந்தர முதல்வர் நியமிக்கப்படாதது ஆகியவற்றை கண்டித்து திருவனந்தபுரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது மாணவர்கள் மீது போலீஸார் தண்ணீரை விசிறியடித்து கலைக்க முயன்றனர். இதனால் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.