கும்மிடிப்பூண்டி அருகே மூடப்பட்ட மது ஆலையில் இருந்து காலாவதியான பீர் பாட்டில்களை அதிகாரிகள் அழித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பில்லா குப்பம் பகுதியில் உள்ள தனியார் பீர் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளது.
அங்கு, 6 லட்சத்திற்கு அதிகமான மது பாட்டில்கள் குவித்துவைக்கப்பட்டுள்ளது. அந்த பாட்டில்களை பொது மக்கள் அவ்வப்போது எடுத்துச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், மது பாட்டில்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அழித்தனர்.