புதுச்சேரி நகரப் பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
புதுச்சேரியை சேர்ந்த பிரபு என்பவர், 45 அடி சாலையில் உள்ள பகுதியில் தனது காரை நிறுத்திவிட்டு சென்ற நிலையில், காரின் முன் பகுதி திடீரென தீப் பற்றி எரிந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர், கார் கண்ணாடிகளை உடைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.