பிரான்ஸ் தேர்தல் இடதுசாரி வெற்றி வெடித்தது வன்முறை!
Aug 24, 2025, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரான்ஸ் தேர்தல் இடதுசாரி வெற்றி வெடித்தது வன்முறை!

Web Desk by Web Desk
Jul 9, 2024, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும், இந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, பிரான்சில் கூட்டணி ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

பிரான்ஸ் உட்பட 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் கட்சி மிக குறைவான உறுப்பினர்களைப் பெற்றது . இதனை அடுத்து, அரசை கலைத்து விட்டு தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார் இம்மானுவேல் மெக்ரான்.

பிரான்ஸ் நாட்டில், கடந்த ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

மொத்தமுள்ள 577 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில், ஆட்சி அமைப்பதற்கு 289 இடங்களில் வெற்றி பெறுவது கட்டாயமாகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், வலது சாரி கொள்கை உடைய மரைன் லீ பென்னின் தேசிய பேரணி கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்று பரவலாக எதிர்பார்க்கப் பட்டது. அதே போல் முதல் கட்டத் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணி கட்சி முன்னிலை பெற்றது.

இரண்டாம் கட்டத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்களின்படி இடதுசாரி கூட்டணி 182 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானின் சென்ட்ரிஸ்ட் கட்சி 168 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வலது சாரி கட்சி 143 இடங்களைப் பெற்று மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இடது சாரிகளுடன் கூட்டணி வைத்து அதிபர் இம்மானுவேல் மெக்ரான் புதிய அரசை அமைக்கலாம் என்று கூறப்படுகிறது.

இடது சாரி கூட்டணி கட்சித் தலைவர்களான , ஜீன் லக் மெலென்சாண் , ஒலிவர் ஃபேர் மற்றும் மரைன் டாண் டெலியர் ஆகிய மூவரும் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவதால், பிரதமர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.

இதற்கிடையே, தற்போதைய பிரதமர் கேப்ரியேல் கடந்த திங்கள் கிழமை தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். வரும் நாட்களில், நேட்டோ உச்சிமாநாட்டிற்காக வாஷிங்டனுக்குச் செல்லும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், ​​நாட்டின் அடுத்த பிரதமர் யார் ? என குறிப்பிட வில்லை. மேலும் புதிய அரசு அமையும் வரை புதிய பிரதமர் குறித்த அறிவிப்பை வெளியிடப்போவதில்லை என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தெரிவித்துளளார்.

முன்னதாக, சுமார் ஒரு வார காலம், பிரான்ஸ் தெருக்களில் வன்முறைகளும், கலவரங்களும், போராட்டங்களில், கட்டுக்கடங்காமல் வெடித்தன.

இந்நிலையில்,தேர்தல் முடிவுகள் பிரான்ஸையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாரீஸ் நகரம் எங்கும் வன்முறைப் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. ஆயிரக்கணக்கான வலதுசாரி எதிர்ப்பாளர்களும் இடதுசாரிக் கட்சியினரும் பாரிஸின் தெருக்களில் வெள்ளம் போல் புகுந்துள்ளனர்.

அதிகரித்து வரும் வன்முறையை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். போராட்டக் காரர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக, எதிர்ப்பாளர்களும் புகை குண்டுகளை வீசினர். இதனால் வன்முறை கட்டுக்கடங்காமல் உள்ளது.

இன்னும் சில நாடுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் , பிரான்ஸ் கலவர பூமி ஆகி இருக்கிறது.

முன்னெப்போதும் இல்லாத தேர்தல் முடிவுகள் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மை, இதெல்லாம், ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான பிரான்சில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை தந்தாலும், தேசிய பேரணி கட்சிக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது என்று கூறும் மரைன் லீ பென், மீண்டும் நான்காவது முறையாக 2027ம் ஆண்டில் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

Tags: The left-wing victory in the French election erupted into violence!
ShareTweetSendShare
Previous Post

பதுங்கு குழிகளுடன் ரகசிய ராணுவத் தளம் லடாக்கில் அமைத்த சீனா!

Next Post

காலிஸ்தானுக்கே ஆதரவு!: சிறையிலிருக்கும் சீக்கிய எம்பி கருத்தால் சர்ச்சை!

Related News

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி!

அமெரிக்காவை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும் இந்தியா மீதான வரிவிதிப்பு : எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள் – சிறப்பு தொகுப்பு !

சட்டவிரோத சூதாட்டம், காங். எம்எல்ஏ கைது : அமலாக்கத்துறை சோதனையில் அள்ள அள்ள பணம் – சிறப்பு தொகுப்பு!

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி – சிறப்பு தொகுப்பு!

பழனி அருகே தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

திருமணம் செய்து கொள்ள காதலன் மறுப்பு : 7-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனை வெற்றி!

திருத்தணி அருகே மின்சாரம் தாக்கியவர் மருத்துவமனையில் அனுமதி – பழுதை சரி செய்ய மின்மாற்றியில் ஏறியபோது நிகழ்ந்த சோகம்!

காரைக்குடி அருகே வணிகர் சங்கத்தின் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

கூடலுார் பகுதியில் சாமந்தி பூ விளைச்சல் சரிவு – விவசாயிகள் கவலை!

உலக விண்வெளி சக்திகளிடையே உயர்ந்து நிற்கும் இந்தியாவிற்கு ககன்யான் திட்டம் சான்று – ராஜ்நாத் சிங் பெருமிதம்!

மழை வருது… மழை வருது… குடை கொண்டு வா – அரசுப்பேருந்தின் அவலம்!

ஊழியரை மதுபோதையில் தாக்கியதாக குற்றச்சாட்டு – கோவிலம்பாக்கம் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்!

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு யானை!

மசினகுடி அருகே உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலி – தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies