இந்திய விவசாயிகளின் நலன் கருதி, ரஷ்யாவுடன் நட்புறவைக் கடைப்பிடிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த அவர், பொருளாதார மந்த நிலை மற்றும் கொரோனா காரணமாக சர்வதேச அளவில் உணவு, எரிபொருள், உரப் பற்றாக்குறை நிலவியபோதிலும், இந்திய விவசாயிகள் பாதிப்படைய தாம் அனுமதிக்கவில்லை என தெரிவித்தார்.
இந்தியா- ரஷ்யா இடையிலான நட்புதான் இதற்கு காரணம் என்றும், இந்தியாவுக்கான உரத் தேவையை ரஷ்யா அறிந்துகொண்டு உதவியதால், விவசாயிகளின் நலன் கருதி அந்நாட்டுடன் நட்பை தொடருவோம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
உலக அளவில் எரிபொருள் பற்றாக்குறை நிலவிய சமயத்தில், இந்தியாவுக்குத் தேவையான பெட்ரோல், டீசலை விநியோகித்து ரஷ்யா உதவியதை புதின் உடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார்.