காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் சாமி வீதி உலா புறப்பாடு உற்சவத்தின்போது யார் முன் செல்வது என்ற பிரச்சினைக்கு சீட்டு குலுக்கி போட்டு தீர்வு காணப்பட்டது.
பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயிலில் சாமி வீதி உலா புறப்பாடின்போது யார் முன் சென்று பாராயணம் வாசிப்பது என வடகலை, தென்கலை பிரிவினர் இடையே பிரச்னை ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிட்டு போலீஸார் முன்னிலையில், குடவோலை முறையில் சீட்டுக் குலுக்கிப் போட்டனர்.
அதை ஒரு குழந்தையை வைத்து எடுத்ததில், சீட்டு வடகலை பிரிவினருக்கு வந்ததையடுத்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.