பீகாரில் நீட் தேர்வில் மோசடி செய்ததாக மாணவர் உள்பட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நீட் மோசடியில் தொடர்புடையதாக பீகார், குஜராத், உத்தர பிரதேச மாநிலத்தில் சிலரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்திருந்தனர். இந்த நிலையில், பீகாரில் புதிதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் நாளந்தா மற்றும் கயா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அதில் ஒருவர் நீட் தேர்வு எழுதிய தேர்வர் என்பதும், மற்றொருவர் தேர்வு எழுதிய மற்றொரு மாணவரின் தந்தை என்றும் சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.