மகாராஷ்டிரா, தெலங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் 6 மில்லியன் மரங்கள் காணாமல் போன விவகாரத்தில் மாநில வனத்துறைகள் பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
2019ம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் மகாராஷ்டிரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் 60 லட்சம் மரங்கள் காணாமல் போயிருப்பதாக, நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் வனத்துறை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகங்கள் ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம்,
3 மாநிலங்களிலும் மிகக் கடுமையான சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்கள் நடந்திருக்கிறது என கருத்து தெரிவித்துள்ளது.