மும்பையில் சொகுசு கார் மோதி பெண் உயிரிழந்த விவகாரத்தில், சிவசேனா பிரமுகர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை ஓர்லி பகுதியில் அதிவேகமாகச் சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் ஷிண்டே சிவசேனா அணியை சேர்ந்த ராஜேஷ் ஷா மகன் மிகிர் ஷா சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
ஏற்கெனவே கார் ஓட்டுநர் ராஜரிஷி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மிகிர் ஷா போலீஸில் சரணடைந்துள்ளார்.
அவரை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, கார் ஓட்டுநரின் போலீஸ் காவலை வரும் 11-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.