நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு வெப் சீரிஸ் பிருந்தா ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
த்ரிஷாவின் முதல் வெப் சீரிஸான பிருந்தா தமிழ், மலையைாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
திரில்லர் வெப் சீரிஸ் ஆக உருவாகியுள்ள இதில் த்ரிஷா போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். மேலும் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், ஜெயபிரகாஷ் ஆம்னி உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர்.