ரசிகர்களின் அன்புத்தொல்லைகளிலிருந்து தற்காத்துக்கொள்ள கால்பந்து ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸி பாடி கார்டு ஒருவரை நியமித்துள்ளார்.
அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்து ஜாம்பவானான மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
ஆனால் மெஸ்ஸியின் ரசிகர்கள் அவ்வபோது விளையாட்டு போட்டிகளின் போது மைதானத்திற்குள் நுழைவது போன்ற அன்புத்தொல்லைகளில் அடிக்கடி ஈடுபடுகின்றனர். தற்போது ரசிகர்களின் அன்புத்தொல்லைகளிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள யாசைன் சூகோ எனும் பாடிகார்டு ஒருவரை நியமித்துள்ளார்.
தற்போது யாசைன் சூகோ ரசிகர்களிடமிருந்து மெஸ்ஸியை பாதுகாக்கும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.