கம்பம் அரசு மருத்துவமனையில் பில்லர் விழுந்து தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில், தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் புதிதாக மகப்பேறு மருத்துவமனை கட்டப்பட்டபோது, சிலாப் பில்லர் விழுந்து கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் அரசு ஒப்பந்ததாரர் பாண்டியராஜன் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிபிஎம், சிபிஐ மற்றும் விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.