இந்தோனேசியா தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.
சுலேசி தீவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தனியார் தங்கச் சுரங்கத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் சுரங்கத்தில் இருந்த பல தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
11 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.
















