இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயற்சியாளராக கவுதம் கம்பீர் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வந்தது.
புதிய பயிற்சியாளரை நியமிப்பதற்காக ஆஷிஷ் நெஹ்ரா உள்ளிட்ட முன்னாள் வீரர்களுடன் பிசிசிஐ பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.