இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி கிரேக் பிராத்வைட் தலைமையிலும், இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையிலும் களமிறங்குகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.