ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 15-ம் தேதி திறக்கப்படவுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷூ, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர திருவிழா நாட்களிலும் நடை திறக்கப்படும்.
அதன்படி, ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை, வரும் 15-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுவார்கள் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.