காலிஸ்தான் பிரிவினைவாதத்தை தூண்டும் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பானது, காலிஸ்தான் பிரிவினைவாத பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த அமைப்புக்கு கடந்த 2019-ஆம் ஆண்டில் மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்தத் தடை உத்தரவு முடிவடைந்த நிலையில், மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.