டி.என்.பி.எல் போட்டியில் மதுரை அணியை வீழ்த்தி 67 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி வெற்றி பெற்றது.
சேலத்தில் நடைபெற்ற போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியும், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 193 ரன்கள் குவித்தது. 194 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மதுரை அணி, 16.4 ஓவர்களில் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 67 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி வெற்றி பெற்றது.