ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் உள்ள மூலவர் ஆனித் திருமஞ்சன விழாவில் வெளியே கொண்டுவரப்படுவதால் நகைகளின் பாதுகாப்புக்கருதி கடந்த ஆண்டு கனகசபை தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு திருமஞ்சனத்தை ஒட்டி வருகின்ற 10 முதல் 13-ம் தேதி வரை பூஜை நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யலாம் என தீட்சிதர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.