உத்தரபிரதேசத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார்.
உத்தர பிரதேசத்தில் பிலிபித் மாவட்டம் சாதர் தாலுகாவுக்கு உட்பட்ட புரான்பூர் மற்றும் பிசால்பூர் தாலுகாவில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பொதுமக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இந்த நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் ஆய்வு செய்து சேத விவரங்களை கணக்கிட்டார்.