தெலங்கானா மாநிலம் சுல்தான்பூரில் கல்லூரி மாணவர்களுக்கான சட்னியில் எலி நீந்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுல்தான்பூரில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியில், மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட இருந்த சட்னியில் எலி நீந்தியது.
இதையறிந்த மாணவர்கள் செல்போனில், அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து தெலங்கானா சுகாதாரத் துறை அமைச்சர் தாமோதர் ராஜா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.