இந்தியாவும் ஆஸ்திரியாவும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இணைந்து செயல்படுவது என முடிவு செய்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பிரதமர் மோடியும் அந்நாட்டு அதிபர் காரல் நெஹம்மரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, தாம் ஏற்கெனவே கூறியபடி, இது போருக்கான தருணம் அல்ல என்றும், போர்க்களத்தில் நின்றுகொண்டு பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்றும் தெரிவித்தார்.
ஆஸ்திரியாவுக்கு தாம் வந்தது வரலாற்றுச் சிறப்புவாய்ந்தது என்று கூறிய பிரதமர் மோடி, உள்கட்டமைப்பு மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஹைட்ரஜன், தண்ணீர் மற்றும் கழிவு மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இந்தியாவும் ஆஸ்திரியாவும் இணைந்து செயல்படுவது என முடிவு செய்ததாக தெரிவித்தார்.
பின்னர், பேசிய ஆஸ்திரிய அதிபர் காரல் நெஹம்மர், இருநாடுகளுக்கும் இடையே ஆண்டுக்கு 2.7 பில்லியன் யூரோ மதிப்பில் வர்த்தகம் நடைபெறுவதாகவும், வரும் நாட்களில் இதன் மதிப்பு அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.