வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 828 மாணவர்களுக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாகவும், 47 பேர் ஹெச்ஐவி பாதிப்பால் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதை ஒப்புக்கொண்ட மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு, இது கடந்த 2007 ஏப்ரல் முதல் நிகழாண்டு மே வரையிலான நிலவரம் என்றும், சமீபத்தில்தான் எய்ட்ஸ் பரவியது போன்ற தோற்றத்தை சிலர் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளான 828 மாணவர்களும் ரெட்ரோவைரல் எதிர்ப்பு சிகிச்சை பெற்று வருவதாகவும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.