ஜாமின் வழங்கக்கோரி மேல்முறையீடு செய்திருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில்பாலாஜி ஜாமின் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையினை நாளை மறுநாளுக்கு ஒத்தி வைக்க வேண்டுமென அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் மனு மீதான விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.