கரூர் அன்ன காமாட்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் எம்.பி ஜோதிமணி சாமி தரிசனம் செய்துவிட்டு புறப்பட்ட சிறிது நேரத்தில் கோயில் நடை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கரூர் பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அன்ன காமாட்சியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது பேசு பொருளான நிலையில் தற்போது இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.