உலக பிரியாணி தினத்தையொட்டி இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங் தயாரித்துள்ள பிரியாணி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் ஜூலை 7 ம் தேதி பிரியாணி தினம் கொண்டடாப்பட்டது. அதையொட்டி இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதுர் சைமன் வோங் பிரியாணி தயாரித்து வீடியோ வெளியிட்டார்.
அந்த வீடியோவில் இது தனது முதல் முயற்சி என்றும், இந்திய மாநிலங்களில் எங்கு சிறந்த பிரியாணி தயாரிக்கப்படுகிறது என்று கூறுங்கள் என்றும் அவர், குறிப்பிட்டுள்ளார்.