பெருவில் பனியில் சிக்கி மாயமான மலையேற்ற வீரரின் உடல் 22 ஆண்டுகளுக்கு பின் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த 2002 ஆம் ஆண்டு மலையேற்றத்தின் போது வில்லியம் ஸ்டாம்பிள் என்ற மலையேற்ற வீரர் பனிச்சரிவில் சிக்கி மாயமானர். 22 ஆண்டுகளுக்குப் பிறகு வில்லியம் ஸ்டாம்பிளின் உடல் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.