இந்தியா உலகத்திற்கு யுத்தத்தை கொடுக்கவில்லை மாறாக புத்தரை கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரியா வாழ் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது பேசிய அவர், பல ஆயிரம் ஆண்டுகளாக நமது திறமை, அறிவை பகிர்ந்து வருவதாக தெரிவித்தார். உலகிற்கு நாம் யுத்தத்தை கொடுக்கவில்லை மாறாக புத்தரை கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அமைதி மற்றும் வளர்ச்சியை இந்தியா கொடுப்பதாக கூறிய அவர், 21ம் நூற்றாண்டில் இந்தியா வலிமைபெற்று வருவதாகவும் பெரும் தெரிவித்தார்.
ஆஸ்திரிய பயணம் மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவும் – ஆஸ்திரியாவும் 75 ஆண்டுகால நட்பை கொண்டாடுவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.