நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
நீட் தேர்வை ரத்து செய்வது, தவறிழைக்காத லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அநீதி இழைப்பது போன்றது என பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாட்னாவில் நடந்ததாக கூறப்படும் வினாத்தாள் கசிவு வழக்கில் வினாத்தாள் நகல்கள் தவறான வழிகளில் முறைகேடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இது போன்ற முறைகேடுகள் வழியாக பயனடைந்த மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் 63 முறைகேடு புகார்கள் தேசிய தேர்வு முகமையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே நீட் தேர்வு தொடர்பான அனைத்து மனுக்களையும் அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.