சென்னை மற்றும் புறநகரில் நேற்று இரவு மிதமான மழை பெய்தது.
நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, தி.நகர், சைதாப்பேட்டை, ராயப்பேட்டை, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. அதிகாலை வரை சாரல் மழை தொடர்ந்தது. இதன் காரணமாக சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பலத்த காற்று மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் இன்னல்களை எதிர்கொண்டனர்.