விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒட்டுமொத்தமாக 82.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானதால் அத்தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தொகுதி முழுக்க வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
தொடர்ந்து, அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரும் 13-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.