ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் செல்லாது என தகவல் வெளியாகி உள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தொடரில் பங்கேற்க இந்திய அணி, பாகிஸ்தான் செல்லாது எனவும், துபாய் அல்லது இலங்கையில் தொடரை நடத்த ஐசிசி-யிடம், பிசிசிஐ கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.