உத்தர பிரதேசத்தில் சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
16 பேர் காயமடைந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே தானா சிக்கந்தராவ் பகுதியில் இரண்டு அடுக்குப் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 16 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.