விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
ராமசாமியாபுரம் பகுதியை சேர்ந்த சகோதரர்களான வீரகுரு, வீரபாண்டி ஆகிய இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் வழக்கம்போல இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து ஆத்திரமடைந்த வீரபாண்டி அண்ணன் வீரகுருவை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.