ஈரோட்டில் உள்ள கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
சக்தி சாலையில் செயல்பட்டு வரும் பரணி பைப்ஸ் என்ற கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.