நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை மாணவர்கள் சந்தித்துப் பேசினர்.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது மற்றும் தேர்வில் நேரமிழந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில் டெல்லியில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.