திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சுவாமி தரிசனம் செய்தார்.
தரிசனம் முடிந்தபின்பு கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க அவருக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.