மும்பையின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த மழையால் , தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை, தானே, ராய்கட் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
நவி மும்பையின் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால், APMC சந்தை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
அதேபோல், கனமழை காரணமாக மும்பை மேற்கு விரைவுச் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மும்பையின் கிங்ஸ் சர்க்கிள் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் நாளை வரை பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, மும்பைக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், தானே மற்றும் ராய்காட் பகுதிக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.