புதுச்சேரி சுகாதாரத் துறையில், வாரிசுதாரர் பணியிடங்களை நிரப்புவதில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி அரசு ஊழியர் சங்க சம்மேளன பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், புதுச்சேரி சுகாதாரத் துறையில் 2015க்கு பிறகு வாரிசுதாரர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தெரிவித்தார்.
137 பேருக்கு பணி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டும், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடு செய்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.