புதுச்சேரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட சாராயம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரியில் இருந்து வாங்கிய மதுவை அருந்திய விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் மேத்யு பிரான்சிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அரசின் வடிசாராய ஆலையில் இருந்து வழங்கப்படும் சாராயம் மட்டும்தான் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.