நேபாளத்தில் உள்ள மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் 63 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள், நிலச்சரிவின் காரணமாக திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
அதிகாலை 3.30 மணியளவில் இந்த நிலச்சரிவு நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக மீட்புப்பணியில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
















