நீலகிரி மாவட்டம் கூடலூரில் நில அளவை பணிக்காக லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
கூடலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை தொடர்பான பணிகளுக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் நிலம் மறு வரையறை செய்வதற்காக உம்மு சல்மா என்பவரிடம் வட்டாட்சியர் ராஜேஸ்வரி 20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.