ஈரோட்டில் இளைஞர்களை கத்தியால் குத்திய மாநகராட்சி ஊழியர் மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணம்பாளையம் காலனியை சேர்ந்த அசோக்குமார், தூய்மை பணியாளராக உள்ளார். இவரது மகன் பாரதிக்கும், அவருடைய நண்பர்களுக்கும் இடையே கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
அப்போது பாரதியை நந்தகிஷோர், நவீன் ஆகிய இருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அசோக்குமார் அவர்கள் இருவரையும் கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அசோக்குமார், அவரது மகன் பாரதியை கைது செய்தனர்.