ஆந்திர மாநிலம், திருப்பதி மலையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் காயமடைந்தார்.
பாபநாசம் செல்லும் வழியில் ஜபாலி ஆஞ்சநேயர் கோயிலுக்கு பெண் ஒருவர் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாரத விதமாக அவர் மீது மரக்கிளை முறிந்து விழுந்துள்ளது. இதில் காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.