சென்னை திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாசர் கோயில் குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அதிகாலை ஆறாம் கால பூஜை மற்றும் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதையடுத்து புனித நீர் ஊர்வலாமாக எடுத்து செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயிலின் விமான கும்பத்திற்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது.
பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.