ராமநாதபுரத்தில் உள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மண்டபம் பகுதியையும் ராமேஸ்வர தீவையும் இணைக்கும் இந்த புதிய ரயில் பாலத்தின் பணிகள் 95 சதவீதம் நிறைவுபெற்றது. கடலில் கப்பல்கள் வரும் போது இந்த ரயில் தடம் லிப்ட் போல் மேலே செல்லும் நவீன முறை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்நிலையில் இந்த புதிய பாலத்தில் ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இந்த சோதனை ஓட்டத்தை ரயில்வே துறை உள் கட்டமைப்பு குழு உறுப்பினர் அனில் குமார் கண்டேல்வால், தென்னக ரயில்வே முதன்மை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.