ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
எர்ணாகுளம் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 14 கிலோ கஞ்சாவை கடத்திய சுப்ரமணியம் மற்றும் அப்துல் ஆகிய இருவரை கைது செய்தனர்.