தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
நாகை மாவட்டம் எட்டுக்குடியில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது கோபுர செப்பு கலசங்கள் நிறுவப்பட்டது.
இந்த கலசங்கள் நிறம் மங்கியதால் அதில் லேக்கர் கோட்டிங் பூசப்பட்டு மீண்டும் கோபுரத்தில் பொருத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் தெற்குபட்டி ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் காசி விஸ்வநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்று, பூஜிக்கப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பவானி அம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பவானி அம்மனை தரிசனம் செய்தனர்.